search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவ கால மாற்றத்தால் கால்நடை தீவன உற்பத்தி பாதிப்பு
    X

    பருவ கால மாற்றத்தால் கால்நடை தீவன உற்பத்தி பாதிப்பு

    • வைக்கோல்களை வாங்கி விவசாயிகள் இருப்பு வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    • அரசு விவசாயிகளுக்கு கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்திற்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது.விவசாயிகள் கால்நடைகளால் கிடைக்கும் பால் விற்பனை மற்றும் கால்நடைகள் விற்பனை மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.விவசாயிகள் கால்நடை தீவனமாக சோளம், வைக்கோல், உள்ளிட்டவற்றை கால்நடைகளுக்கு வழங்குகின்றனர். இந்த நிலையில் கடந்த பருவத்தில் பயிரிடப்பட்ட சோளப் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டு உரிய விளைச்சல் தரவில்லை. இதனால் கால்நடைகளுக்கு தீவனமாக வைக்கோல்களை வாங்கி விவசாயிகள் இருப்பு வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து சித்தம்பலம் விவசாயி கோபால் கூறியதாவது:-

    விவசாயத்துடன் கால்நடைகள் வளர்ப்பதன் மூலமாக கிடைக்கும் வருமானம் சற்று உதவிகரமாக உள்ளது. கால்நடைகளுக்கு தீவனமாக சோளம், வைக்கோல், உள்ளிட்டவற்றை வழங்குகின்றோம்.இந்த நிலையில் கடந்த பருவத்தில் சோளப் பயிர்கள் சாகுபடி செய்தோம். நன்கு வளர வேண்டிய சோளப் பயிர்கள், மழையால் பாதிக்கப்பட்டு சரியாக வளரவில்லை. வழக்கமாக ஆடி மாதத்தில் காற்று மட்டுமே வீசும். மழை இருக்காது. ஆனால் இந்த முறை ஆடி மாதத்தில் தொடர் மழை பெய்தது. இதனால் சோளத்தட்டுகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்காக தற்போது வைக்கோலை வாங்கி வந்து தீவனத்திற்காக சேமித்து வைக்கிறோம். அரசு விவசாயிகளுக்கு கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×