என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டக்டர் விசில் அடிப்பதற்கு முன் டிரைவர் பஸ்சை ஓட்டியதால் அங்கன்வாடி பணியாளர் தவறி விழுந்து படுகாயம்
    X

    கோப்பு படம்.

    கண்டக்டர் விசில் அடிப்பதற்கு முன் டிரைவர் பஸ்சை ஓட்டியதால் அங்கன்வாடி பணியாளர் தவறி விழுந்து படுகாயம்

    • கண்டக்டர் விசில் அடிப்பதற்கு முன்னதாகவே பஸ்சை நகர்த்தியதால் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்

    நத்தம்:

    நத்தம் அருகே வேலம்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசி (வயது 43). இவர் நத்தம் வெள்ளைக்குட்டு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாளராக உள்ளார். நத்தம்- சிங்கம்புணரி செல்லும் அரசு பஸ்ஸில் கலையரசி வேலைக்குச் சென்றார்.

    அப்போது பஸ் டிரைவர் நத்தம் அண்ணா நகரைச் சேர்ந்த சுப்பிரமணி, கண்டக்டர் விசில் அடிப்பதற்கு முன்னதாகவே பஸ்சை நகர்த்தியுள்ளார். இதனால் கலையரசி பஸ்ஸில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது தலையில் ரத்த காயம் மற்றும் உடலில் சிராய்ப்பு ஏற்பட்டு படுகாயத்துடன் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இது குறித்து காயம் அடைந்த பெண்ணின் சகோதரர் ராஜரத்தினம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நத்தம் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×