என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில் மயக்கவியல் தினவிழா
- அறுவை சிகிச்சையின் போது பொதுவாக 3 வகையான முறைகளில் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது.
- பொதுவாக மக்கள் பயப்படும் விஷயம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான மருந்து செலுத்தப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்பதாகும்.
நத்தம்:
நத்தம் என்.பி.ஆர். செவிலியர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 'உலக மயக்கவியல் தின விழா' நடந்தது. செவிலியர் கல்லூரி முதல்வர் அன்னலெட்சுமி தலைமை தாங்கினார். 2-ம் ஆண்டு இதயவியல் தொழில்நுட்ப மாணவி ஹாஷியா வரவேற்று பேசினார்.சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் புனித வளனார் ஆஸ்பத்திரியின் மயக்கவியல் நிபுணர் டாக்டர் பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
அறுவை சிகிச்சையின் போது பொதுவாக 3 வகையான முறைகளில் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது.
செயற்கை சுவாசம் தொடரப்படும். இந்த முறையில் நோயாளிக்கு சுயநினைவு இருக்காது. மயக்க மருத்துவத்தில் பொதுவாக மக்கள் பயப்படும் விஷயம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான மருந்து செலுத்தப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்பதாகும்.அவ்வாறு பயப்பட தேவையில்லை. ஏனென்றால் மயக்க டாக்டர் உங்கள் அருகிலேயே இருந்து உங்கள் மருந்தின் அளவு, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் இன்ன பிற உயிர் அளவீடுகளை விழிப்புடனும், ஜாக்கிரதையாகவும் ஒவ்வொரு நொடியும் கவனித்துக் கொண்டிருப்போம் என்றார்.
மேலும் மயக்கவியல் மருத்துவம் தொடர்பான கருத்துக்களை மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். செவிலியர் கல்லூரி 2-ம் ஆண்டு இதயவியல் தொழில்நுட்ப மாணவி ஹிபா நன்றியுரையாற்றினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை என்.பி.ஆர். கல்லூரி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.






