என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஏலம் நிறுத்தம்

    • காணிக்கை முடிக்கான அடிப்படை ஏலத்தொகை கூடுதலாக இருப்பதாக கூறி உள்ளனர்.
    • ஊராட்சி தலைவர் ஆர்த்தி ஹரி பாபு, ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காணிக்கை முடிக்கான பொது ஏலம் மற்றும் பிரசாத கடை வைக்க உரிமம் வழங்குவதற்கான ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை பொன்னேரி சரக ஆய்வர் மற்றும் ஆலய பரம்பரை அறங்காவலர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஆலய வளாகத்தில் ஏலம் விடுவதற்கான நடைமுறை தொடங்கியது.

    ஆனால், காணிக்கை முடிக்கான அடிப்படை ஏலத்தொகை கூடுதலாக இருப்பதாக கூறி யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதேபோல் பிரசாத கடை வைக்க உரிமம் ஏலம் எடுக்கவும் யாரும் வரவில்லை. இதனால் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    ஊராட்சி தலைவர் ஆர்த்தி ஹரி பாபு, ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன், பரம்பரை அறங்காவலர் ராஜசேகர் குருக்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.

    Next Story
    ×