என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே சோகத்தூர் ஏரிக்கரையில் இருந்து ஆஞ்சநேயர் சிலையை லாரியில் கொண்டு செல்லப்பட்டதை படத்தில் காணலாம்.
தருமபுரி சோகத்தூரில் உள்ள பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலை இடமாற்றம்
- 4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக தருமபுரி சோகத்தூரில் உள்ள பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- தருமபுரியில் ஏரிக்கரை அருகே உள்ள சென்ன கேசவா பெருமாள் கோவில் அருகே ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி அடுத்த சோகத்தூர் ஏரிக்கரை அருகே தகடூரை ஆண்ட அதியமான் மன்னரால் வீர தீர ஆஞ்சநேயர் கோவில் நிறுவப்பட்டது.
இந்த கோவிலை பொது மக்கள் புதுப்பித்து வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் ஓசூர் முதல் அதியமான்கோட்டை வரை புதிதாக 4 வழி விரைவு சாலை அமைக்கப்படும் பணி நடந்து வருகிறது.
கோவில் அருகே அமைக்கப்படும் மேம்பாலத்தால் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் கோயிலை பாதுகாப்பாக அகற்றக்கோரி இந்து சமய அறநிலை துறைக்கு அறிவுறுத்தினர்.
இதனை அடுத்து நேற்று அறநிலைத்துறையினர் சுமார் 5 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையை பாதுகாப்பாக கிரேன் மூலம் அகற்றி ஏரிக்கரை அருகே உள்ள சென்ன கேசவா பெருமாள் கோவில் அருகே ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
விரைவில் இங்கு கோவில் அமைக்க இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் சோகத்தூர் ஊர் பொது மக்கள் முடிவு செய்து உள்ளனர்.
இந்த சிலை மாற்றம் தொடர்பாக இந்து சமய அறநிலைத் துறையி னருக்கு சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் மூலம் பெருந்தொகை கை மாறி உள்ளதாக தெரிய வந்துள்ளது.






