என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிநீர் தொட்டியை மூடாமல் திறந்த நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.
திறந்த நிலையில் காணப்படும் குடிநீர் தொட்டி
- அலுவலகத்தின் நுழைவாயில் அருகே நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி திறந்தவெளியில் பழுதாகி காணப்படுகிறது.
- விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வருவாய் கோட்டத்தின் உட்பட்ட 32 ஊராட்சிகளில் புலிகரை, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, வெள்ளிச்சந்தை ஆகிய வருவாய் கிராமங்களிலிருந்து தினதோறும் தங்கள் அடிப்படை தேவையான ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பட்டா, சிட்டா மாறுதல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓய்வூதியம், உதவித்தொகை, உள்ளிட்டவைகளுக்கும் அரசு கருவூலகம், பொதுபணிதுறை அலுவலகத்திற்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என வந்து செல்லுகின்றனர்.
இந்த அலுவலகத்தின் நுழைவாயில் அருகே நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி திறந்தவெளியில் பழுதாகி காணப்படுகிறது.
விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






