என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனுஅளிக்க வந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் தனி நபர்
- குடியிருப்பு வாரியம் அருகில் தனி நபருக்கு சொத்தமான நிலம் உள்ளது.
- நடவடிக்கை எடுத்து மீண்டும் சுற்று சுவரை கட்டி தர வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஹள்ளி பஞ்சாயத்தில் கடைமடை என்னும் இடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது.
குடியிருப்பு கடந்த 2001-ம் வருடம் பஞ்சாயத்தி டம் சாலைகள், கழிவுநீர் கா ல்வாய்கள், சிறு பாலங்கள், குடிநீர், தெரு விளக்கு மற்றும் பராமரிப்பு பணி காரணமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்பை சுற்றிலும் சுற்று சுவர் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டி தரப்பட்டுள்ளது.குடியிருப்பு வாரியம் அருகில் தனி நபருக்கு சொத்தமான நிலம் உள்ளது.
இந்த நிலத்திற்கு வழி வகை செய்ய தனி நபரான ஒருவர் சுற்று சுவரை இடித்து உள்ளார்.இது சம்மந்தமாக பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு காவல் துறையினர் முன்னிலையில் மீண்டும் சுற்று சுவரை கட்டி தருவதாக அவர் கூறி சென்று உள்ளார்.
ஆனால் சுற்று சுவரை கட்டி தராமல் 21-11-2022 அன்று மீண்டும் டிராக்டர் கொண்டு இடிக்க வந்துள்ளனர். இதனை சீனிவாசன் என்பவர் தடுக்க செல்லும் போது அவர் மீது டிராக்டர் ஏற்றி கொலை முயற்சி செய்துள்ளனர்.
இந்த பஞ்சாயத்து தலைவியும் இதற்கு உடைந்தையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பகுதியில் அடியாட்கள் கொண்டு மிரட்டுவது அங்கேயே மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனால் அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் உள்ளனர்.
எனவே தங்கள் பகுதி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்,சுற்று சுவரை இடித்தவர் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் சுற்று சுவரை கட்டி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.