என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு வாகனத்தை மேயர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
நெல்லையில் புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு வாகனம் - மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்
- நெல்லை மாநகர பகுதியில் புகையில்லா போகி கொண்டாடும் வகையில் மாநராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு வாகனத்தை டவுன் தேரடி திடலில் மேயர் சரவணன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நெல்லை:
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாப்படுகிறது.
புகையில்லா போகி
இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் புகையில்லா போகி கொண்டாடும் வகையில் மாநராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு வாகனத்தை டவுன் தேரடி திடலில் மேயர் சரவணன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் மாநகர பகுதியில் உள்ள 55 வார்டுகளுக்கும் சென்று புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
மேலும் மாநகர பகுதியில் உள்ள பொதுமக்கள் தேவையற்ற பொருட்கள், துணிகள் உள்ளிட்டவற்றை சாலையில் வீசாமல் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல அலுவலகங்களில் வழங்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அங்கு செல்ல முடியாதவர்கள் 10 வார்டு அலுவலங்களில் வழங்குமாறும் அதிகாரிகள் கூறினர்.
நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, கவுன்சி லர் உலகநாதன், சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






