என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.ம.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
- அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
- மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கினார்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூர் கழக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் டாக்டர் பன்னீர் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர் சேட்டு, விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைத் தலைவர் டாக்டர் பாலு, மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன், நகர நிர்வாகிகள் காந்தி, ராஜா,தீப்பொறி மாதையன், சுழல் கண்ணன், ராஜேஷ் ,ஆறுமுகம் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story






