என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
- மாணவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப்போட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நினைவுச் சின்னம் மற்றும் இணைய பக்கம் வெளியிடப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பஞ்செட்டி வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பழைய மாணவர்கள் தங்களது கல்லூரி காலங்களில் நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டனர். மேலும், மாணவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப்போட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் சிறப்பு அழைப்பாளராக கல்வி குழும தலைவர் எம்வி முத்துராமலிங்கம், இயக்குனர் எம்விஎம் சசிகுமார் மற்றும் பொன்னேரி மேலாளர் நாகமுத்து கலந்துகொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர். கல்லூரி முதல்வர் பாலாஜி, துணை முதல்வர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நினைவுச் சின்னம் மற்றும் இணைய பக்கம் வெளியிடப்பட்டது.
Next Story






