என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆலங்குளம் மகளிர் கல்லூரியில் அனைத்து மாணவிகளும் படிக்க ஏற்பாடு
  X

  ஆலங்குளம் மகளிர் கல்லூரியில் ஆர்.டி.ஓ. கங்காதேவி ஆய்வு செய்தார். அருகில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன்.

  ஆலங்குளம் மகளிர் கல்லூரியில் அனைத்து மாணவிகளும் படிக்க ஏற்பாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்குளத்தில் அரசு பெண்கள் கல்லூரி தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
  • தொடர்ந்து மாணவிகள் அங்கேயே தங்கள் கல்வியைத் தொடரலாம் என ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளார்.

  ஆலங்குளம்:

  ஆலங்குளத்தில் அரசு பெண்கள் கல்லூரி தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

  இந்த கட்டிடத்தில் போதிய வகுப்பறைகள் இல்லை என்பதால், கல்லூரியில் உள்ள 1000 மாணவிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளை 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராணி அண்ணா மகளிர் கல்லூரிக்கு சென்று பயில கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.

  ஆனால் வெகுதூரம் சென்று படிப்பதால் வீடு திரும்ப தாமதமாகும், கூடுதல் செலவினங்கள் ஏற்படும் என கூறி கடந்த 3 நாட்களாக மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில் கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில் தென்காசி ஆர்.டி.ஓ. கங்காதேவி, தற்காலிகமாக கல்லூரி செயல்படும் பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்தார். அப்போது அங்கேயே போதிய இடம் இருப்பதும் தொடர்ந்து மாணவிகள் இங்கேயே தங்கள் கல்வியைத் தொடரலாம் என்பதும் தெரிய வந்தது.

  தொடர்ந்து கட்டிட உரிமையாளர் டாக்டர் செந்திலிடம் இது தொடர்பாக பேசி முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் கல்லூரி காலை, மாலை என இரு பிரிவுகளாக இங்கேயே நடைபெறும் என ஆர்.டி.ஓ. கூறினார்.

  இந்த ஆய்வின் போது தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், மாவட்ட பிரதிநிதி சாமுவேல் ராஜா, அவைத்தலைவர் ஜோசப், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், பேரூராட்சி துணைத்தலைவர் ஜான்ரவி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சாலமன் ராஜா, கணேசன், ஒன்றிய பிரதிநிதி ஆதி, கோட்டப் பொறியாளர் காளீஸ்வரன், வருவாய் ஆய்வாளர் ரத்தினம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

  Next Story
  ×