search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    25 பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்
    X

    25 பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்

    • அதிக சத்தம் எழுப்பும் வகையில் 25 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒழிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பேருந்து நிலைய வளாகத்தில் விபத்தில்லா போக்குவரத்து குறித்து விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஈஸ்வரன் தலைமையில் காங்கயம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகளில் காற்று ஒலிப்பான் பயன்பாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அதிக சத்தம் எழுப்பும் வகையில் 25 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒழிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான் பயன்படுத்துவது குறித்து புகாா் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டாா் வாகன ஆய்வாளா் ஈஸ்வரன் எச்சரிக்கை விடுத்தாா். தொடா்ந்து பேருந்து நிலைய வளாகத்தில் விபத்தில்லா போக்குவரத்து குறித்து விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.

    Next Story
    ×