search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம் அருகே வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாய தோட்டத்தில் பயிற்சி
    X

    பயிற்சியில் ஈடுபட்டுள்ள வேளாண் கல்லூரி மாணவிகள்.

    பெரியகுளம் அருகே வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாய தோட்டத்தில் பயிற்சி

    • பெரியகுளம் அருகே வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு விவசாய தோட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • உதவி தோட்டக்கலை அலுவலர் ரெங்கராஜன் கலந்து கொண்டு விவசாய திட்டங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே வடுகபட்டியில் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் கலசலிங்கம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் அபிதாஸ்ரீ, அருணா, தீபிகா, வினோதினி, சந்தனா, மதுப்ரியா, ஸ்ரீ வர்ஷா, ராஜாசரஸ்வதி, யோகேஸ்வரி, சுஜிமாலினி, அஞ்சலிகா ஆகியோர் நேரடியாக விவசாயிகளின் தோட்டத்திற்கு சென்று வயல்வெளி பயிற்சி மற்றும் செய்முறைகள் பயன்கள் பற்றி பயின்று வருகின்றனர்.

    மேலும் கொய்யா இலைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் அஸ்வினி பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக மஞ்சள் ஒட்டும் பொறி அட்டையை தயார் செய்யும் முறையினை காண்பித்தனர்.

    இதில் பெரியகுளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜாஸ்மின், தோட்டக்கலை அலுவலர் சரவணன் ஆகியோர் அறிவுறுத்தலின் கீழ் உதவி தோட்டக்கலை அலுவலர் ரெங்கராஜன் கலந்து கொண்டு விவசாய திட்டங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

    Next Story
    ×