search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி அருகே 12 ஆண்டுகளுக்கு பிறகு நீரின்றி முற்றிலும் வறண்ட கண்மாய்
    X

    மழை இல்லாததால் தண்ணீர் வறண்டு காணப்படும் மீனாட்சியம்மன் கண்மாய்.

    போடி அருகே 12 ஆண்டுகளுக்கு பிறகு நீரின்றி முற்றிலும் வறண்ட கண்மாய்

    • இந்த கண்மாய் நீரை சார்ந்து இப்பகுதியில் நெல், சோளம், மக்காச்சோளம், தென்னை மற்றும் பல்வேறு காய்கறி வகைகள் பயிரிடப்பட்டு வருகிறது.
    • சுமார் 5 சதுர கி.மீ பரப்பளவு உள்ள கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு சிறு குட்டையாக காட்சி காட்சியளித்து வருவதால் விவசாயிகள் வேதனையடை ந்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் மீனாட்சியம்மன் கண்மாய் அமைந்துள்ளது. சுமார் 5 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மீனாட்சிபுரம் அருகே அமைந்திருந்தாலும் அம்மா பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்டது.

    தற்போது தமிழ்நாடு மீன்வளத்துறை கட்டு ப்பாட்டில் மீன் குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. தினமும் இந்த கண்மாயி லிருந்து சுமார் 750 கிலோ முதல் 1 டன் வரை கெண்டை, கெளுத்தி, கட்லா, ரோகு போன்ற மீன்கள் பிடிக்கப்பட்டு வெளியூர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மேலும் இந்த கண்மாயைச் சுற்றிலும் அயல்நாட்டு பறவைகளான பெலிக்கன், கரண்டி மூக்கன், கொக்கு சென்நாரை, கருநாரை, மீன் கொத்தி பறவைகள், நீர்காகம் போன்ற பல்வேறு பறவை இனங்கள் இன ப்பெருக்கம் செய்து வருகிறது.

    இப்பகுதியில் உள்ள மீனாட்சிபுரம், அம்மாபட்டி, பத்ரகாளி புரம், விசுவாச புரம், டொம்புச்சேரி போன்ற கிராமங்களை சுற்றியுள்ள சுமார் 5000 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களின் முக்கிய நீர் பாசனத்திற்காக இந்த கண்மாய் நீர் பயன்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இந்த கண்மாய் நீரை சார்ந்து இப்பகுதியில் நெல், சோளம், மக்காச்சோளம், தென்னை மற்றும் பல்வேறு காய்கறி வகைகள் பயிரிடப்பட்டு வருகிறது.

    தற்போது போடிநாய க்கனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தென்மே ற்கு பருவ மழை பொய்த்து விட்டதால் முற்றிலும் மழை இல்லாமல் உள்ளது. இதனால் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது. எனவே கோடை காலம் முடிந்தும் இன்னும் வெப்பமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு ஆடுக ளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. சுமார் 5 சதுர கி.மீ பரப்பளவு உள்ள கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு சிறு குட்டையாக காட்சி காட்சியளித்து வருவதால் விவசாயிகள் வேதனையடை ந்துள்ளனர்.

    6 அடி ஆழத்திற்கு மேல் நீர் வற்றியதால் மதகுகள் வழியாக விவசாயத்திற்கு கண்மாய் நீரை பயன்படுத்த முடியவில்லை. எனவே இப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக இந்த கண்மாய் நீர் வற்றி விவ சாயம் பாதிக்கப்பட்டு ள்ள தால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×