என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 நாட்களுக்கு பிறகு   விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதியளிக்க வேண்டும்  -முதல்-அமைச்சருக்கு சிவசேனா கட்சி இளைஞரணி கோரிக்கை
    X

    ஊர்வலத்தில், மும்பை ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்.

    10 நாட்களுக்கு பிறகு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதியளிக்க வேண்டும் -முதல்-அமைச்சருக்கு சிவசேனா கட்சி இளைஞரணி கோரிக்கை

    • தமிழ்நாட்டிலும் கடைபிடிக்க, மு.க.ஸ்டாலின் அனுமதியளிக்க வேண்டும்.
    • சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.நேற்று சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சிவசேனா கட்சியின் யுவசேனா பிரிவின் சார்பில்,ஓசூர்- தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.நேற்று சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விநாயகர் சிலை ஊர்வலத்தை, யுவசேனாவின் மாநில தலைவர் சேலம் வேணுகோபால், மாநில ஒருங்கிணைப்பாளர் மும்பை ஸ்டாலின் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    மேலும் இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, வேணுகோபால் மற்றும் மும்பை ஸ்டாலின் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    விநாயகர் பண்டிகையை முன்னிட்டு,மராட்டிய மாநிலத்தில் எவ்வாறு சிவசேனா கட்சி மட்டுமின்றி, அனைத்து இந்து அமைப்புகள், இந்து குடும்பங்களில் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் செய்து, 10 நாட்களுக்கு பிறகு ஊர்வலத்துச் சென்று கரைக்கப்படுகிறதோ, அதே போன்று அடுத்த ஆண்டு இந்த வழக்கத்தை தமிழ்நாட்டிலும் கடைபிடிக்க, மு.க.ஸ்டாலின் அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

    .யுவசேனா அணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை மீறி சிலர் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இதனை அனுமதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் நிருபர்களிடம் கூறினர்.

    பின்னர் விநாயகர் சிலை, மேள தாள முழக்கத்துடன் ஊர்வலமாக எடுத்துசெ ல்லப்பட்டு ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் கரைக்கப்பட்டது.

    Next Story
    ×