search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீன்சில் நோய் தாக்குதலை கட்டுபடுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
    X

    பீன்ஸ் பயிர்களை வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் பார்வையிட்டனர்.

    பீன்சில் நோய் தாக்குதலை கட்டுபடுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

    • பட்டர் பீன்ஸ் மற்றும் முருங்கை பீன்ஸ் வகையில் மஞ்சள் தேமல் நோய் மற்றும் வெள்ளை ஈ தாக்கத்தினால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • விதை நேர்த்தி டிரைக்கோ டெர்மா மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அல்லது கார்பெண்டா சிம் மருந்தினை ஒரு கிலோ விதைக்கு ஒரு கிராம் என்ற விதத்தில் கலந்து நடவு செய்ய வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் தோட்ட க்கலைத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயி களுடன் வேளாண் விஞ்ஞா னிகள் மற்றும் தோட்ட க்கலைத்துறை அலுவலர்கள் சந்தித்து தொழில்நுட்ப விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செண்பகனூர் பகுதியில் நடைபெற்றது. இங்கு பட்டர் பீன்ஸ் மற்றும் முருங்கை பீன்ஸ் வகையில் மஞ்சள் தேமல் நோய் மற்றும் வெள்ளை ஈ தாக்கத்தினால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ரவீந்திரன் மற்றும் தோட்டக்கலை துணை இயக்குனர் காயத்ரி, தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை துறை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட வயல்களை ஆய்வு செய்து அப்பகுதி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

    அப்போது தோட்டக்கலை ஆராய்ச்சி தலைவர் மற்றும் பேராசிரியர் கூறுகையில், பீன்ஸ் வகை பயிர்களில் முதலில் கோடை உழவு செய்ய வேண்டும். விதை நேர்த்தி டிரைக்கோ டெர்மா மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அல்லது கார்பெண்டா சிம் மருந்தினை ஒரு கிலோ விதைக்கு ஒரு கிராம் என்ற விதத்தில் கலந்து நடவு செய்ய வேண்டும். பின்பு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அட்மா திட்ட மேலாளர் நன்றி கூறினார்.

    Next Story
    ×