என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. இளைஞர் அணி சார்பில் அண்ணா சிலைக்கு மாலை
- அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கே.பி .அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தருமபுரி,
அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பேரறிஞரின் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தருமபுரி அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் உயர்கல்வி அமைச்சருமான கே.பி .அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி,கிருஷ்ணகிரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, நகர ,ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story