search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என காங்கிரசார் நம்புகின்றனர் நத்தம் விசுவநாதன் பேச்சு
    X

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசினார்.

    அ.தி.மு.க தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என காங்கிரசார் நம்புகின்றனர் நத்தம் விசுவநாதன் பேச்சு

    • திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் துணை பொது செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது,

    நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.கவின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தி.மு.கவினர் பழைய பூத் ஏஜென்ட்கள் அனைவரையும் மாற்றிவிட்டு புதிதாக நியமனம் செய்து உள்ளனர்.

    வாக்காளர் ஜாவிதா பட்டியலில் கட்சி நிர்வாகிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த பொழுது எப்படி பம்பரமாக நாம் செயல்பட்டோமோ அதே போல் தற்போது செயல்பட வேண்டும்.

    இது நமது கட்சிக்காக செய்ய வேண்டிய அடிப்படை பணி. சரியாக செயல்படாத பூத் ஏஜெண்டுகளை மாற்ற வேண்டும். புதிதாக வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் திறம்பட செயல்பட வேண்டும்.

    அ.தி.மு.கவுக்கு வருங்காலம் பிரகாசமாக உள்ளது. தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழக மக்கள் மாபெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். எங்கே பார்த்தாலும் இந்த ஆட்சி அவப்பெயரை சம்பாதித்து உள்ளனர். கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கூட அடுத்த முறை நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக வருவார் என என்னிடம் கூறினார். அந்த அளவுக்கு தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போய் உள்ளது.

    சில ஊடகங்கள் மட்டும் தி.மு.க அரசை பாராட்டி வருகிறது. தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×