என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாரண்டஅள்ளி அருகே அ.தி.மு.க.-தி.மு.க. கொடிக்கம்பங்கள் சேதம்
  X

  மாரண்டஅள்ளி அருகே அ.தி.மு.க.-தி.மு.க. கொடிக்கம்பங்கள் சேதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொடி கம்பங்கள் சேதமானது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
  • குடி போதையில் அவர் இவ்வாறு செய்ததும் தெரிய வந்தது.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி-வெள்ளிசந்தை சாலையில் சிக்க மாரண்ட அள்ளி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நடப்பட்டு உள்ளன.

  இந்நிலையில் அங்கு நடப்பட்டிருந்த அ.தி.மு.க., தி.மு.க. கொடிக்கம்பங்கள் இரண்டும் சேதமாகி இருந்தன. இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட கட்சியினருக்கு தகவல் தெரிவித்தனர்.

  இதையடுத்து அங்கு வந்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சியினர் கொடி கம்பங்கள் சேதமானது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

  அ.தி.மு.க. கவுன்சிலர் முருகன், தி.மு.க. கிளை செயலாளர் குமார் ஆகியோர் தனித்தனியாக மாரண்ட அள்ளி போலீசில் புகார் செய்தனர்.

  இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் (வயது 45) என்பவர்தான் கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியது தெரிய வந்தது.

  குடி போதையில் அவர் இவ்வாறு செய்ததும் தெரிய வந்தத், அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  Next Story
  ×