என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்திருப்பேரையில் அ.தி.மு.க. கொடியை மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஏற்றி வைத்தார்.
தென்திருப்பேரையில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு விழா
- அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்கவிழா தென்திருப்பேரை பஸ் நிலையம் அருகில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சண்முகநாதன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைதார்
தென்திருப்பேரை:
அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்கவிழா தென்திருப்பேரை பஸ் நிலையம் அருகில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஆறுமுகநயினார் தலைமை தாங்கினார். ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சண்முகநாதன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைதார். கழக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், நகர அம்மா பேரவை செயலாளர் மணிகண்டன், மாவட்ட டாஸ்மாக் தலைவர் உலகமுத்து, நகர பொருளாளர் கோயில்பிள்ளை, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் லட்சுமணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.