என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து விதிகளை மீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை:  போலீசார் எச்சரிக்கை
    X

    போக்குவரத்து விதிகளை மீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை

    • தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
    • துண்டுப் பிரசுரங்களை வழங்கி எச்சரிக்கை விடுத்தனர்.

    தருமபுரி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகிறது. இந்த ஆட்டோக்களை இயக்கும் டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறை களை மீறுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வருகிறது.

    இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளு மாறு போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் உத்தரவின் பேரில் தருமபுரியில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு நாகலிங்கம் அறிவு றுத்தலின்படி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி ஆலோசனையில் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சின்னசாமி, ரகுநாதன் மற்றும் போலீசார் தருமபுரி நகரில் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்ட னர்.

    அப்போது போக்கு வரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆட்டோ டிரைவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆட்டோ டிரைவர்கள் கண்டிப்பாக சீருடை அணிந்து வர வேண்டும்.

    செல்போன் பேசிக்கொண்டும், ப்ளூடூத் காதில் அணிந்து கொண்டும் ஆட்டோ இயக்கக் கூடாது. தருமபுரி நகரில் பஸ் நிலையம் முன்பு மற்றும் ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் பயணிகளை ஏற்றக்கூடாது. டிரைவிங் லைசன்ஸ், ஆட்டோ பர்மிட், இன்சூரன்ஸ் மற்றும் புகைச்சான்று வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஆட்டோக்களில் ஆடியோ பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட போக்கு வரத்து விதிமுறைகளை மீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு நகரங்களிலும் இயங்கும் ஆட்டோ டிரைவர்களுக்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து போலீசார் விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி எச்சரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×