search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மே-1-ந்தேதி தருமபுரியில் தொழிலாளர்களை வேலை வாங்கிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    X

    தருமபுரி-அரூர் சாலையில் சாலை பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுவதை படத்தில் காணலாம்.

    மே-1-ந்தேதி தருமபுரியில் தொழிலாளர்களை வேலை வாங்கிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    • அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரர் தொழிலாளர்களை இது போன்ற செயலில் ஈடுபடுத்துவது குற்றமாகும்.
    • மாவட்ட நிர்வாகம் ஒப்பந்ததார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    தருமபுரி,

    தமிழக முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம் சார்பாக ரூ.310 கோடி மதிப்பில் தருமபுரி- அரூர் இரு வழி பாதையும், மற்றும் ரூ.96.50 கோடி திருவண்ணாமலை- அரூர் வரை இருவழி பாதையை 4 வழி பாதையாக மொத்தம் ரூ. 410 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்பாடு பணிகளை கடந்தாண்டு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் பொது பணி நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து ஒப்பந்ததார்கள் மூலம் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நாடு முழுவதும் மே தினத்தன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு அவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கான ஊதியமும் சேர்த்து வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

    அதற்கு மாறாக தருமபுரியில் இருந்து அரூர் வரை நடைபெற்று வரும் சாலை பணிகள் மே தினமான நேற்று தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுக்காமல் ஒப்பந்ததார் தொழிலாளர்களை சாலை போடும் பணிகளை அமர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரர் தொழிலாளர்களை இது போன்ற செயலில் ஈடுபடுத்துவது குற்றமாகும். ஆகையால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஒப்பந்ததார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×