என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை
    X

    ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை

    • உத்தரவை மீறி மீன்வளர்ப்போர்கள் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்வளர்த்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும்.
    • பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும் அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாயநிலை உருவாகும்.

    கிருஷ்ணகிரி,

    அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்து ள்ளார்.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய பசுமை ஆணைய தீர்ப்பாயத்தின் ஆணைப்படி வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளது.

    இந்த மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இந்த மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை.

    மேலும் எட்டு அல்லது மேற்பட்ட ஆண்டுகள் வாழக்கூடியவை, இதனால் இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்து விட்டால் அவைகளை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று.

    மேலும் இந்த மீன்கள் மிகக்குறைந்த அளவு தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கெண்ட மீன்களாகும்.

    மேலும் இந்த மீன்கள் நமது நாட்டின் பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும் அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாயநிலை உருவாகும்.

    இந்த மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ, அல்லது மீன்வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால், இவை மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காலங்களில் குளங்களிலிருந்து தப்பித்துவிட வாய்ப்பு உள்ளது.

    அவ்வாறு தப்பிச் செல்லும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரி மற்றும் ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகும்.

    இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நமது உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் வழி இல்லாமல் போய்விடும்.

    எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன் விவசாயிகள் அரசால் தடை செய்யப்பட்ட கொடூரமான ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை இருப்பு செய்து வளர்க்க வேண்டாம். ஏற்கனவே மீன்பண்ணை களில் இந்த இன மீன்களை வளர்த்து வரும் மீன்வளர்ப்பவர்கள் மீன்பண்ணையில் வளர்ந்து வரும் மீன்களை அழிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த உத்தரவை மீறி மீன்வளர்ப்போர்கள் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்வளர்த்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும்.

    மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள மீன் பண்ணை யாளர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை மீன்வளத் துறையின் ஆலோசனை பெற்று வளர்க்கவும், புதிதாக மீன்பண்ணை அமைக்கும் மீன் விவசாயி கள் கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை முதன்மை நிர்வாக அலுவ லரை தொடர்பு கொண்டு தங்கள் மீன்பண்ணையை பதிவு செய்து அரசு வழங்கும் மானியத்தினை பெற்று பயனடையலாம்.

    மேலும் இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், கதவு எண் 24-25, வார்டு எண் 27, 4-வது கிராஸ், கோ-ஆப்ரேட்டிவ் காலனி, கிருஷ்ணகிரி 635 001 மற்றும் தொலைபேசி எண் 04343 - 235745 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×