என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே விபத்துகள்: வட மாநில பெண் உள்பட 3 பேர் பலி
    X

    கிருஷ்ணகிரி அருகே விபத்துகள்: வட மாநில பெண் உள்பட 3 பேர் பலி

    • ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமி போரோ (வயது 27). இவர் தற்போது தனது உறவினர்களுடன் ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    பெங்களூரு-ஓசூர் சாலையில் இவர் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்தமோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

    இது குறித்து லட்சுமி போரோவின் உறவினர் மகாப்தா போரோ கொடுத்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல பதனபள்ளி பகுதியை சேர்ந்த வெங்கட்டம்மா (வயது 60) என்பவர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மகள் தனலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல பெலகொண்டளாப்பள்ளி பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (42) என்பவர் சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி வீணா கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×