என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்மாபேட்டை ஆற்றின் கரையோரம் சென்னம்மாள் கோவிலில் வழிபட்ட பக்தர்களை படத்தில் காணலாம்.
டி.அம்மாபேட்டையில் ஆடிபெருக்கு விழா
- சென்னம்மாள் கோவிலில் 36-ம் ஆண்டு ஆடி பெருக்கு விழா நடைபெற்றது.
- ஆடி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே அம்மாபேட்டை ஆற்றின் கரையோரம் சென்னம்மாள் கோவில் உள்ளது.
சென்னம்மாள் கோவிலில் 36-ம் ஆண்டு ஆடி பெருக்கு விழா நடைபெற்றது. கோவிலில் பக்தர்கள் வழிப்பட்ட பின்னர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள பாறைகளை தெய்வமாக கருதி மஞ்சள், குங்குமம் தூவி பொறிகடலை, தேங்காய் உடைத்து பழங்களை வைத்து வழிப்பட்டனர்.
பின்னர் ஆடு, கோழி ஆகியவைகளை பலியிட்டு அங்கேயே குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டனர். இந்த ஆண்டு ஆற்றில் ஓரளவிற்கு தண்ணீர் சென்றது. தண்ணீர் ஓடியதால் பக்தர்களுக்கு வசதியாக இருந்தது. ஆடி பெருக்கு பண்டிகையை ஒட்டி தருமபுரி, ஊத்தங்கரை, அரூரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
ஆடி மாதம் முழுவதும் இந்த கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் மேலும் ஆடி 28-ம் சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடதக்கது.






