search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு வரி எண்ணுடன் ஆதாா்   எண்ணை இணைக்க வேண்டும் - காங்கயம் நகராட்சி அறிவிப்பு
    X

    வீட்டு வரி எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் - காங்கயம் நகராட்சி அறிவிப்பு

    • வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் ஜிஎஸ்டி., எண் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும்.
    • ஆவணங்களை இணைக்க நகராட்சி சேவை மையத்தில் நேரில் வழங்கலாம்.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சியில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டு வரி எண்ணுடன் ஆதாா் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கயம் நகராட்சிப் பகுதிக்குள் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டு வரி எண்ணுடன் ஆதாா் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணை இணைக்க வேண்டும்.

    தொழிற்கூடம் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் ஜிஎஸ்டி., எண் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும்.

    வாடகை வீட்டில் குடியிருப்பவராக இருந்தால் வீட்டின் உரிமையாளரது ஆதாா் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணை பெற்று இணைக்க வேண்டும். மேற்கண்ட ஆவணங்களை இணைக்க நகராட்சி சேவை மையத்தில் நேரில் வழங்கலாம். அல்லது 75980-59898 என்ற செல்போன் எண்ணில் தொடா்பு கொண்டோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ தங்களது விவரங்களை தெரிவித்து, இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×