என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்
- நிகழ்ச்சிக்காக சுமார் 7 பவன் தங்க நகையுடன் சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை.
- அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள நல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் இவருடைய மனைவி சரிதா (வயது 20). இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.
இந்நி லையில் உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சுமார் 7 பவன் தங்க நகையுடன் சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது மாமியார் மாரண்டஅள்ளி போலீசில் அட்டை புழுக்கை கிராமத்தை சேர்ந்த வேணுகோபால் என்கிற தினேஷ் என்பவர் கடத்திச் சென்று இருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story