என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மனைவி, குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலியுடன் மாயமான தொழிலாளிக்கு வலை
- அய்யலூர் அருகே கள்ளக்காதலியுடன் மாயமான தொழிலாளி மனைவி, குழந்தை தவித்து வருகின்றனர்.
- மாயமான கள்ளக்காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.
வடமதுரை :
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னு ச்சாமி(40). இவருக்கு வள்ளி(38) என்ற மனைவி யும், ராேஜஸ், ராஜேந்திரன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். பொன்னுச்சாமி மரம் வெட்டும் வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு அருகே தனலட்சுமி(28) என்பவர் வசித்து வந்தார்.
கணவனை இழந்த இவருக்கு 10 வயதில் ஆண்குழந்தை உள்ளது. பொன்னுச்சாமிக்கும், தனலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்கா தலாக மாறியது. இவர்களது பழக்கம் அக்கம்பக்கத்தி னருக்கு தெரியவரவே வள்ளி இதனை கண்டி த்துள்ளார். இந்நிலையில் பொன்னுச்சாமியும், தனலட்சுமியும் திடீரென மாயமாகினர். அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
பொன்னுச்சாமி தனது மனைவி மற்றும் குழந்தை களை தவிக்கவிட்டு செ ன்றது போல தனலட்சுமியும் தனது மகனை தவிக்கவிட்டு சென்றுவிட்டார். இதனால் 3 குழந்தைகளும் அனா தையாக உள்ளனர். இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் வள்ளியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் மாயமான கள்ளக்காதல் ேஜாடியை போலீசார் தேடி வருகின்ற னர்.