என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
பண்ணைக்காடு அருகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடிய ன்குடிசை, மங்களம்கொம்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
- அதிகாலை பண்ணைக்காடு பிரிவு அருகே மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடிய ன்குடிசை, மங்களம்கொம்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மேகமூட்ட த்துடன் காணப்பட்டது.
மதியம் தொடங்கி இரவு வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு, மரக்கிளைகள் விழுந்தன.
இன்று அதிகாலை பண்ணைக்காடு பிரிவு அருகே மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் கொடைக்கானல், பண்ணை க்காடு, தாண்டிக்குடி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வத்தலகுண்டு நெடுஞ்சா லைத்துறையினர் மற்றும் பொதுமக்களும் இணைந்து மரத்தை வெட்டி அப்புற ப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கி யது. இதனால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story






