என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது.
    X

    பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது.

    • விவசாயிகளின் 21 ஆடுகளை தாக்கி கொன்றது.
    • அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்படும் என வனத்துறையினா் சாா்பில் தெரிவித்தனர்.

    ஊட்டி,

    கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மீனங்காடி, பீனாட்சி, அம்பலவயல், நென்மேனி, அதன் சுற்றுவட்டாரம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக புலி, உலவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.மேலும் விவசாயிகளின் 21 ஆடுகளை தாக்கி கொன்றது.புலியின் நடமாட்டம் காரணமாக அச்சமடைந்த அப்பகுதி மக்கள் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனா். வனத்துறையினரும் புலியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா். மேலும், புலி நடமாடும் பகுதிகளில் கூண்டுகளை வைத்தனா். இந்நிலையில், அம்பலவயல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி சிக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட வன அலுவலா் சஜினா, கால்நடை மருத்துவா் அருண் சக்கரியா மற்றும் வனத் துறையினா் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பத்தேரியிலுள்ள காப்பகத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு புலியின் உடல்நலம் குறித்து பரிசோதித்த பின் அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்படும் என வனத்துறையினா் சாா்பில் தெரிவித்தனர்.

    Next Story
    ×