என் மலர்
உள்ளூர் செய்திகள்

டி.சி.ஆர்.மருத்துவமனை சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்
- டாக்டர் சி.சவுந்தரராஜின் தந்தை டாக்டர் டி.சின்னராஜூவின் 90-ம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- டி.சி.ஆர். சர்க்கிளில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள டி.சி.ஆர். மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் சி.சவுந்தரராஜின் தந்தை டாக்டர் டி.சின்னராஜூவின் 90-ம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சேலம் - சென்னை பைபாஸ் அருகில் உள்ள டி.சி.ஆர். சர்க்கிளில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள், மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
Next Story






