என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு தங்க ஊசியால் எழுத்து எழுதும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
குழந்தைகளுக்கு தங்க ஊசியால் நாக்கில் எழுத்து எழுதும் நிகழ்ச்சி
- குழந்தைகளுக்கு எழுத்து எழுதும் விழா இன்று தருமபுரியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
- 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்
தருமபுரி கேரள சமாஜத்தின் சார்பில் 22-வது ஆண்டு வித்யாரம்பம் என்கின்ற புதிதாக பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து எழுதும் விழா இன்று தருமபுரியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பகவதி கோவில் மேல்சாந்தி பகவதி சவாமி நம்பூதிரி குழுவினர் வருகை தந்து லட்சுமி, சரஸ்வதி, பகவதி, பூஜைகள் செய்து குழந்தைகளுக்கு எழுத்து எழுதும் சடங்கு நடத்தி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக தங்க எழுத்தாணியில் குழந்தைகளின் நாக்கில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுதினார்.
பின்னர் குழந்தைகளின் கையைப் பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுத வைத்து ஆசி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எழுத்து எழுதும் சடங்கு நடத்தி வைக்கப்பட்டது.
மேலும் குழந்தைகளுக்கு கேரளா சமாஜத்தின் சார்பில் சிலேட்டு, பென்சில், புத்தகம் உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது.






