என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தஞ்சையில் ராஜாஜி அடைக்கப்பட்ட சிறைச்சாலையை நினைவுச் சின்னமாக்க கோரிக்கை
  X

  புற்கல் மண்டி சிதலமடைந்து கிடக்கும் சிறைச்சாலை வளாக கட்டிடம்.

  தஞ்சையில் ராஜாஜி அடைக்கப்பட்ட சிறைச்சாலையை நினைவுச் சின்னமாக்க கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் செய்த போது வேதாரண்யத்துக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு தஞ்சையில் உள்ள சிறையில் தான் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • நடுவில் கண்காணிப்பு கோபுரம் சூரிய கதிர்களைப் போல 8 வளாகங்களில் ஒவ்வொரு வளாகத்திற்கும் 31 அறைகள் கொண்ட இந்த சிறைச்சாலை அழகிய தோற்றத்துடன் காணப்பட்டு வந்தது.

  தஞ்சாவூர் :

  இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது சுதந்திரத்திற்கான வேட்கை அதிகரித்து போராட்டங்கள் தொடங்கிய நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்களை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் சிறைகளை அமைத்த ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் 1885 ஆம் ஆண்டு சிறைச்சாலையை அமைத்தனர்.

  இங்கு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை அடைத்து வைத்து சித்திரவதை நடத்தியதாக வரலாறு உண்டு.

  ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் செய்த போது வேதாரண்யத்துக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு தஞ்சையில் உள்ள சிறையில் தான் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறைச்சாலை பின்பு சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியாக மாற்றப்பட்டு குற்றச்செ–யல்களில் ஈடுபடும் சிறார்கள் வைத்திருக்கும் இடமாக மாற்றப்பட்டது .

  மேலும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்குமிடமாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கேயே 8-ம் வகுப்பு வரை ராஜாஜி நடுநிலைப்பள்ளி என்ற பள்ளி் தற்பொழுது இயங்கி வருகிறது.

  நடுவில் கண்காணிப்பு கோபுரம் சூரிய கதிர்களைப் போல 8 வளாகங்களில் ஒவ்வொரு வளாகத்திற்கும் 31 அறைகள் கொண்ட இந்த சிறைச்சாலை அழகிய தோற்றத்துடன் காணப்பட்டு வந்தது.

  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக 12 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது.

  இதனால் தென்புறம் உள்ள சிறைப்பகுதிகளில் பாதி சிறைப்பகுதிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல அறைகளும் உடைக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் இதனை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்.

  தற்போது நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை போற்றும் வகையில் அவர்களின் நினைவு கூறும் வகையில் இந்த சிறைச்சாலையை புனரமைத்து 140 ஆண்டுகளுக்கு மேல் உள்ள இந்த சிறைச்சாலையை பாதுகாக்க வேண்டும். நினைவு சின்னமாக ஆக்க வேண்டும்.

  வளாகத்தில் உள்ள சுதந்திரதேவி சிலை கூட சிதிலமடைந்து உள்ளது . அதனையும் சீரமைக்க வேண்டும் என்று தஞ்சை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×