என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு
  X

  வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்த காட்சி.

  குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வனத்துறையினர் விரைந்து வந்து 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர்.
  • பிடிக்கபட்ட மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

  பென்னாகரம்,

  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் வட்டுவனஅள்ளி ஊராட்சி யில் கடைக்காரசி கொட்டாய் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியை சுற்றிலும் வனப்பகுதி சூழ்ந்து காணப்படுகிறது.

  இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கடைக்காரசி கொட்டாய் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

  இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடி யாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

  அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர்.

  பின்னர் பிடிக்கபட்ட மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் இக்கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  Next Story
  ×