என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்டெருமை தாக்கி பிளம்பர் படுகாயம்
- தேயிலை தோட்டத்தில் ஏராளமான காட்டெருமைகள் கூட்டமாக நின்றிருந்தன.
- காட்டெருமை திடீரென ராஜசேகரை நோக்கி ஓடி வந்து தாக்கியது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிளன்டெல் எஸ்டேட் உள்ளது. இங்கு வசித்து வருபவர் ராஜசேகர்(62). இவர் தேயிலை தோட்டத்தில் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை இவர் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார். அப்போது செல்லும் வழியில் ஏராளமான காட்டெருமைகள் கூட்டமாக நின்றிருந்தன.
அதில் ஒரு காட்டெருமை திடீரென ராஜசேகரை நோக்கி ஓடி வந்து தாக்கியது. இதில் அவர் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. வலி தாங்க முடியாத அவர் அலறி சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story






