search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்கலாம்:கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்
    X

    புதிய தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்கலாம்:கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்

    • 3 சதவிகித பின்முனை வட்டி மானியம் கடன் திரும்ப செலுத்தும் காலம் வரையிலும் வழங்கப்படுகிறது.
    • மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024 ஆம் நிதியாண்டில் சுய தொழில் தொடங்க கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 36 தொழில் திட்டங்களுக்கு மானியமாக ரூ.3 கோடியே 55 லட்சம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீட்டில்தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசு சார்பில் நிலம், கட்டிடம் மற்றும் எந்திரம் உள்ளடக்கிய திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 சதவிகித பின்முனை வட்டி மானியம் கடன் திரும்ப செலுத்தும் காலம் வரையிலும் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ,அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் கூடுதல் வழிகாட்டுதலுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்தி க்குறிப்பில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×