என் மலர்
உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்
- புளிய மரம் ஒன்றில் ஆண் ஒருவர் கயிற்றில் பிணமாக தொங்கினார்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள பெத்தூர் காட்டு மாரியம்மன் கோவில் வனப்பகுதியில் வனக்காப்பாளர் ஆனந்த் ரோந்து சென்றார்.
அப்போது அந்த வனப்பகுதியில் உள்ள புளிய மரம் ஒன்றில் ஆண் ஒருவர் கயிற்றில் பிணமாக தொங்கினார். இது குறித்து ஆனந்த் அரூர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக தொங்கியவருக்கு சுமார் 65 முதல் 70 வயதிற்குள் இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story