search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குஜராத் உருளைகிழங்கிற்கு அதிகரிக்கும் மவுசு
    X

    குஜராத் உருளைகிழங்கிற்கு அதிகரிக்கும் மவுசு

    • கர்நாடக மாநிலம் ஹசன் உள்ளிட்ட இடங்களில் விளையும் உருளைக்கிழங்கு அதிக அளவில் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • குஜராத் உருளைக்கிழங்கை வட மாநில தொழிலாளர்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.

    அவிநாசி :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி உள்ளிட்ட இடங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இதில் நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இதில் ஊட்டி உருளைக்கிழங்கின் விலை அதிகம் என்பதால் குஜராத், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், ஈரோடு மாவட்டம் திம்பம், கர்நாடக மாநிலம் ஹசன் உள்ளிட்ட இடங்களில் விளையும் உருளைக்கிழங்கு அதிக அளவில் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:- தனி சுவை, குணம் நிறைந்த ஊட்டி உருளைக் கிழங்கிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மவுசு இருந்தாலும் கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விலைக்கே வாங்க வேண்டியுள்ளது. சில்லரை விற்பனையில் கிலோ 80 ரூபாய்க்கு மேல் தான் விற்க வேண்டியிருப்பதால் நடுத்தர வர்க்கத்து வாடிக்கையாளர்கள் வாங்குவதில்லை. குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் மட்டுமே வாங்குகின்றனர். அதே நேரம் குஜராத்தில் இருந்து கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கு விற்க கூடிய விலையில், உருளைக்கிழங்கு கிடைக்கின்றன. குறிப்பாக குஜராத் உருளைக்கிழங்கை வட மாநில தொழிலாளர்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். இதனால் அதிக அளவில் கொள்முதல் செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×