search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானை தாக்கி ஆடு மேய்ப்பவர் படுகாயம்
    X

    யானை தாக்கி ஆடு மேய்ப்பவர் படுகாயம்

    • யானைகள் தேன்கனிக்கோட்டை பகுதிக்கு வந்துள்ளது,
    • யானை கிருஷ்ணப்பாவை துரத்தி உள்ளது. அப்போது அவரைத் துதிக்கையால் தூக்கி வீசி உள்ளது.

    தேன்கனிக்கோட்டை,

    கர்நாடக மாநிலம் பன்னேர்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை பகுதிக்கு வந்துள்ளது,

    இந்த காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன, இந்த யானை கூட்டத்தை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே சாப்ராணப்பள்ளி கிராமத்தின் அருகில் னாயசரஅயிரசை மாவட்டம் பாலக்கோடு அருகே கோலியனூர் பகுதியை சேர்ந்த சிலர் ஆடுகளை மேய்த்து வருகின்றனர்,

    நேற்று இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு அதன் அருகே தூங்கிக் கொண்டிருந்தனர், நள்ளிரவில் ஐந்து யானைகள் வந்துள்ளது, அதைப் பார்த்த பாலக்கோடு அருகே உள்ள கூலியினூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா (வயது 45)ீீ என்பவர் யானை கூட்டத்தை பார்த்து ஓடியுள்ளார். அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை கிருஷ்ணப்பாவை துரத்தி உள்ளது. அப்போது அவரைத் துதிக்கையால் தூக்கி வீசி உள்ளது.

    அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் அந்த யானை திரும்பச் சென்றுள்ளது உடனே படுகாயம் அடைந்த வரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×