என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திமுக செயல் வீரர்கள் கூட்டம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு
    X

    கூட்டத்தில் மு.பெ.சாமிநாதன் பேசிய போது எடுத்த படம். அருகில் மாவட்ட செயலாளர் இல பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்

    திமுக செயல் வீரர்கள் கூட்டம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

    • தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கத்தில் நடைபெற்றது.
    • பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கத்தில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளர்

    கூட்டத்துக்கு அவைத்தலைவர் ஜெயரா மகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான இல.பத்மநாபன் முன்னி லை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பேசினார்.

    ஆலோசனை

    தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையும், நலத்திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வரைவு வாக்கா ளர் பட்டியலை சரிபார்ப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×