search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  உளுந்து அடிக்கும் எந்திரத்தில் சிக்கிய பெண் தொழிலாளி பலி
    X

    பண்ருட்டியில் உளுந்து அடிக்கும் எந்திரத்தில் சிக்கிய பெண் தொழிலாளி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புஷ்பா (வயது 47). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் உளுந்து அடிக்கும் எந்திரத்தில், உளுந்து அடித்துக் கொண்டிருந்தார்.
    • புஷ்பாவின் கழுத்தில் இருந்த துண்டு உளுந்து அடிக்கும் எந்திர விசிறியில் மாட்டிக்கொண்டது. தூக்கி வீசப்பட்ட புஷ்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது,.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மனைவி புஷ்பா (வயது 47). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் உளுந்து அடிக்கும் எந்திரத்தில், உளுந்து அடித்துக் கொண்டிருந்தார். அப்போது புஷ்பாவின் கழுத்தில் இருந்த துண்டு உளுந்து அடிக்கும் எந்திர விசிறியில் மாட்டிக்கொண்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட புஷ்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு புஷ்பாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சை பலன் அளிக்காமல் புஷ்பா இன்று பரிதாபமாக உயிரிழந்தார். புஷ்பாவின் கணவர் ராமசாமி (55) கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×