search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
    X

    வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

    • காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • பீதி அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதேநேரம் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.

    பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு தொண்டை வலி , உடற்சோர்ர்வுடன் கூடிய வைரஸ் காய்ச்சல், வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் பனிக்காலத்தில் இது போன்ற வைரஸ் காயச்சல்கள் பரவுவது இயல்பான ஒன்று. ஆனால் நடப்பாண்டு பார்த்தோம் என்றால் கோடைக்காலம் என்பது தொடங்கி விட்டது.

    குறிப்பாக கடந்த சில வாரங்களாகவே மாறுபட்ட சீதோஷண நிலையின் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த காய்ச்சல் அதீத காய்ச்சல் ஆகவும் பல்வேறு உடல் சார்ந்த பாதிப்புகளையும் கொண்டிருக்கிறது.

    இன்புளுயன்ஸா எனப்படும் ப்ளு காய்ச்சல் வேகமாக பரவுவது கண்பிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆர்.எஸ்.வி. எனப்படும் சுவாச பாதையை தாக்கும்வைரஸ் பரவுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக கோடைக்காலங்களில் குறையத் தொடங்கும் இது போன்ற காய்ச்சல் பாதிப்புகள், மார்ச் மாதம் பிறந்தும் தொடர்கிறது. புற நோயகளிகள் சிகிச்சை பிரிவிற்கு வருவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மாறுப்பட்ட சிதோஷண நிலை, கொசுக்குழுக்களுடைய வாழ்நாள் அதிகரிப்பு காரணமாக இந்த பாதிப்பு அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் அரசு சார்பாக தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    காய்ச்சல் தொண்டை வலி அதிகரிக்க வழக்கமான வைரஸ் பாதிப்புகளில் ஏதேனும் உருமாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதேநேரம் நடப்பாண்டில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்புகள் மிக குறைவாக காணப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறினர். பொதுமக்கள் இந்த வைரஸ் பாதிப்பு குறித்து பீதி அடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    Next Story
    ×