என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதுகாப்பான தாய்மையை பின்பற்றினால் ஊனமுற்ற குழந்தை பிறக்காது அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு
    X

    200 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.

    பாதுகாப்பான தாய்மையை பின்பற்றினால் ஊனமுற்ற குழந்தை பிறக்காது அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு

    • பெண்மைக்கு எத்த னையோ சிறப்புகள் இருந்தா லும், அதில் அனைத்திலும் உச்சமாய் இருப்பது தாய்மை,
    • சிறு குழந்தைகளு க்கான உணவூட்டும் முறைகள் மற்றும் குழந்தை வளர்ச்சி பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைெபற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசியதாவது:-

    பெண்மைக்கு எத்த னையோ சிறப்புகள் இருந்தா லும், அதில் அனைத்திலும் உச்சமாய் இருப்பது தாய்மை, ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் தாய்மை என்பது ஒரு முக்கியமான நிகழ்வு. தாய்மை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வரப்பிரசாதம் மற்றும் மறுபிறப்பாகும்.

    நம்முடைய உடலும், மனமும் நெருங்கிய தொடர்பு உள்ளவை. மனதில் ஏற்படும் மாற்றங்கள். முக்கியமாக கவலைகள் உடலையும், உடலில் ஏற்படும் மாற்றங்கள் மனதையும் பெரிதும் பாதிக்கின்றது. பாது காப்பான தாய்மைக்கு. கர்ப்ப காலத்தில் தனக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்கள், கர்ப்ப கால கவனிப்புகள், பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளு க்கான உணவூட்டும் முறைகள் மற்றும் குழந்தை வளர்ச்சி பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    ஏனெனில், பாதுகா ப்பான தாய்மையை பின்பற்றாததால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு சம்மந்தப்பட்ட பிரச்சினை களால் பாதிக்கப்படுகி ன்றனர். இவர்களுடைய அஜாக்கிரதையினால் ஊனமுற்ற குழந்தைகளின் பிறப்பு விகிதமும், குழந்தை களின் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.

    பாது காப்பான தாய்மைக்காக கூறப்பட்டுள்ள அறிவுரை களை தாய்மார்கள் பின்பற்றுவதன் மூலம் தாய் சேய் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும். அவ ர்களின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய முடியும். அறிவுள்ள ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெ டுத்து ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தையும் உருவாக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    Next Story
    ×