search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டி பேரூராட்சியில் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு
    X

    கோப்பு படம்

    ஆண்டிபட்டி பேரூராட்சியில் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு

    • ஆண்டிபட்டி பேரூராட்சியில் சில மாதங்களாகவே தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்து வந்தது.
    • உறுப்பினர்களின் கோரிக்கையை செவிகொடுத்து கேட்காத தலைவரை மாற்றிவிட்டு வேறு ஒரு தலைவரை நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 19 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க உறுப்பினர்கள் 9, அ.தி.மு.க 6, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தலா ஒருவர் உள்ளனர்.

    தலைவராக சந்திரகலா என்பவரும், துணைத்தலைவராக ஜோதிசேகர் என்பவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்களாக உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று மாதாந்திர கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பெரும்பான்மையான தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினர்கள் வரவில்லை. இதுகுறித்து கவுன்சிலர்கள் சிலர் தெரிவிக்கையில், பேரூராட்சியில் தங்கள் வார்டுக்குட்பட்ட பிரச்சினைகளை தலைவரிடம் தெரிவித்தாலும், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    பெயருக்காக கூட்டம் நடத்தி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது. உறுப்பினர்களின் கோரிக்கையை செவிகொடுத்து கேட்காத தலைவரை மாற்றிவிட்டு வேறு ஒரு தலைவரை நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். இதற்காக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்க உள்ளோம் என்றனர்.

    மேலும் தாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக மக்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவை செயல்அலுவலரிடம் வழங்கி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சியினர் இறங்கியுள்ளனர்.

    Next Story
    ×