என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அஞ்சல் கோட்டத்துக்கு 9 விருதுகள்
    X

    திருப்பூர் அஞ்சல் கோட்டத்துக்கு 9 விருதுகள்

    • ஐ.பி.பி.பி. பொது காப்பீடு பிரிவுகளில் திருப்பூர் தெற்கு உட்கோட்டம் விருதுகள் பெற்றுள்ளது.
    • தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் மரியம்மா தாமஸ் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தபால் துறை சார்பில், தமிழக அஞ்சல் வட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கோட்டங்கள், உபகோட்டங்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னையில் கடந்த மாதம் 29-ந்தேதி நடைபெற்றது.

    இதில் திருப்பூர் அஞ்சல் கோட்டம் கடந்த நிதியாண்டில் இந்திய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் ரூ.3 கோடியோ 9 லட்சம் பிரீமியம் ஈட்டி 2-ம் இடமும், கிராமிய அஞ்சல் காப்பீட்டு திட்டத்தில் ரூ.2 கோடியோ 81 லட்சம் பிரீமியம் ஈட்டி 3-ம் இடமும், பார்சல் பதிவு வருவாய் வளர்ச்சி வீதத்தில் அதிக வளர்ச்சி பெற்ற பிரிவில் ரூ.54 லட்சம் வருவாய் ஈட்டி தமிழக அளவில் 2-ம் இடமும் என 3 முக்கிய பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது.

    பார்சல் பிரிவில் பதிவு செய்த வருவாய் வளர்ச்சி கடந்த 2023-24 நிதியாண்டை காட்டிலும் 96 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், ஐ.பி.பி.பி. பிரீமியம் கணக்கு சேர்க்கை மற்றும் ஐ.பி.பி.பி. பொது காப்பீடு பிரிவுகளில் திருப்பூர் தெற்கு உட்கோட்டம் விருதுகள் பெற்றுள்ளது.

    தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் மரியம்மா தாமஸ் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிதியாண்டில் கோட்ட வாரியாகவும், உட்கோட்ட வாரியாகவும், தனிப்பட்ட சிறப்பு செயல்பாடு உள்பட மொத்தம் 9 விருதுகளை திருப்பூர் அஞ்சல் கோட்டம் பெற்றுள்ளது.

    Next Story
    ×