என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
பெங்களூரில் இருந்து தேனிக்கு கடத்தி வந்த 800 கிலோ குட்கா பறிமுதல்
- குட்காவை பெங்களூரிலிருந்து தேனி பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
- வாகனத்தில் வந்த 7 பேர்களையும் போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க போலீசார் தொடர்ந்து ரோந்து பணியிலும், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேனி எஸ்.பி. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் தேனி அல்லிநகரம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் தனியாக ஒரு அறை அமைத்து அதில் 800 கிலோ குட்கா பொருட்கள் 40 மூடைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குட்காவை பெங்களூரிலிருந்து தேனி பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த விஜயராகவன் (32) என்பவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
வாகனத்தில் வந்த கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த கெம்புராஜ் (23), கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முகமுது யூசுப் (33), கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா பகுதியை சேர்ந்த தீபக் (23), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த உதயகுமார் (31), கார்த்திகேயன் (31), ஆனந்தகுமார் (32) ஆகிய 7 பேர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவை சேர்ந்த குட்கா வியாபாரிகள் தேனி வியாபாரியிடம் விற்பதற்காக முதன்முறையாக இங்கு வந்ததாகவும், வழி தெரியாமல் அங்கும் இங்கும் வாகனத்தில் சென்றதால் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் சிக்கிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. 7 பேர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 40 மூடை குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.






