search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை ஒன்றியத்தில்  80 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
    X

    நிலக்கோட்டை பகுதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள்.

    நிலக்கோட்டை ஒன்றியத்தில் 80 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

    • 80 கிராமங்களில் இருந்து விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    • இதனைத் தொடர்ந்து நேற்று காலை அந்தந்த பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் மினி வேன், டிராக்டர், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக நிலக்கோட்டைக்கு வந்தனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஒன்றியம் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை, அணைப்பட்டி, விளாம்பட்டி, சிலுக்குவார்பட்டி, தோப்புப்பட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, சிறுநாயக்கன்பட்டி, பள்ளபட்டி, கொடைரோடு, துரைச்சாமிபுரம், கோட்டை, அப்பாவு பிள்ளைபட்டி உள்ளிட்ட 80 கிராமங்களில் இருந்து விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இதனைத் தொடர்ந்து நேற்று காலை அந்தந்த பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் மினி வேன், டிராக்டர், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக நிலக்கோட்டைக்கு வந்தனர்.

    நிலக்கோட்டை நால்ரோட்டில் இந்து முன்னணி சார்பாக பொதுக்கூட்டம் எழுச்சி ஊர்வலம் மதுரை கோட்டச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தலைவர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர் பரமேஸ்வரன், ஒன்றிய பொதுச்செயலாளர் நாகராஜ் ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர். மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் சிறப்புரையாற்றி பேசினார்.

    இதனைத் தொடர்ந்து ஊர்வலம் நிலக்கோட்டையில் தொடங்கி கோட்டை, துரைச்சாமிபுரம், முசுவனூத்து, பிரிவு சொக்கு பிள்ளை பட்டி, சிறு நாயக்கன்பட்டி அணைப்பட்டி வழியாக 80க்கும் விநாயகர் சிலைகள் அணைப்பட்டி வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.

    நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி தலைமையில் விநாயகர் சிலைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    Next Story
    ×