என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஓசி மதுபானம் தராத டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்தியவருக்கு 8 ஆண்டு சிறை
- டாஸ்மாக் ஊழியரை குத்திய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- இவ்வழக்கில் வாலிபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தாலுகா பெரும்பாறை கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் சக்திவேல்(42). கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் அதேபகுதியை சேர்ந்த செந்தில்குமார்(40) என்பவர் தனக்கு ஓசியாக மதுபானம் தருமாறு சக்திவேலிடம் கேட்டுள்ளார்.
அவர் தர மறுக்கவே ஆத்திரமடைந்த செந்தில்குமார் தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் அவர் கடையை அடைத்துவிட்டு வெளியே வந்தபோது மீண்டும் தகராறு செய்து காலி மதுபாட்டிலை எடுத்து சக்திவேலின் வயிற்றில் குத்தினார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து செந்தில்குமாைர கைது செய்தனர்.
இந்த வழக்கு கொடைக்கானல் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கார்த்திக், பாட்டிலால் குத்திய செந்தில்குமாருக்கு 8 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.