என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பழனி மலைக்கோவிலில் 75 பேர் பயணிக்கும் மின் இழுவை ரெயில் சோதனை ஓட்டம்
- 72 பேர் பயணிக்கும் வசதி கொண்ட மின் இழுவை ரெயிலை இயக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
- தற்போது 2 பெட்டிகளும் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.
பழனி:
பழனி மலைக்கோவிலுக்கு செல்ல படி வழிக்கு மாற்றாக மேற்கு கிரி வீதியில் இருந்து 3 பாதைகளில் மின் இழுவை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 2 பெட்டிகளில் 36 பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் ஒவ்வொரு ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 72 பேர் பயணிக்கும் வசதி கொண்ட மின் இழுவை ரெயிலை இயக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக 3-வது தண்டவாளத்தில் பெட்டிகளை பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெட்டி மட்டும் பொருத்தப்பட்டு முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது 2 பெட்டிகளும் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. வடகயிற்றின் இழுவை திறன், பெட்டியின் நகரும் தன்மை, தண்டவாளத்தின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விரைவில் எடை அளவு வைத்து சோதனை ஓட்டம் நடைபெறும்.
அதன்பின்னர் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவினர் ஆய்வுக்கு பிறகு இறுதிகட்ட சோதனை ஓட்டம் நடத்தப்படும். இதையடுத்து இந்த மின் இழுவை ரெயில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






