என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூரில் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள்  விழா
    X

     விழாவில் ஒன்றிய கழக செயலாளர் குணவசந்தரசு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய போது எடுத்த படம்.

    மத்தூரில் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா

    • முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் கொண்டாடபட்டது.
    • அறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் தி.மு.க வடக்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் கொண்டாடபட்டது.

    இதனை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் உள்ள அறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அக்கட்சியின் ஒன்றிய கழக செயலாளர் குண வசந்தரசு தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

    இவ்விழாவில் முன்னாள் ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் ராமமூர்த்தி, ஒன்றியத்துணை செயலாளர்கள் ஜீவானந்தம். மூர்த்தி , மத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும். ஊராட்சி செயலாளருமான கமலநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சங்கர் , ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி ,மாவட்ட பிரதிநிதிகள் சாந்தமூர்த்தி, கோவிந்தராஜ். நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல். கே.எட்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள், ஒன்றிய பிரதிநிதி தனசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் டைகர் பாலு, மகேஸ்வரி மாதப்பன், களர்பதி ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, பால் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×